உலக வர்த்தகத்தில் அதிர்வெண் ஏற்படுத்திய அமெரிக்கா-சீனா வரி போர் தொடரும் நிலையில், சமரச முயற்சியில் இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளன.
டிரம்ப்–ஜின்பிங் தொலைபேசி உரையாடல் நேர்மறையாக நடந்தது; ஜூன் 9ல் லண்டனில் உயர் மட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு சீனா விதிக்கும் அதிக வரிக்கேற்ப, டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா சீன பொருட்களுக்கு 145% வரி விதித்தது. இதனால் இரு பெரிய பொருளாதார சக்திகளுக்கும் இடையே தொடங்கிய வர்த்தக போர், உலக சந்தைகளில் விலைவாசி உயர்வு, பொருட்களின் பற்றாக்குறை போன்ற விளைவுகளை ஏற்படுத்தியது. தற்போதைய சூழ்நிலையில், இரு தலைவர்களும் சமரசத்திற்கு தயாராக இருப்பதாகக் கூறப்பட்டு, வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடர ஜூன் 9ம் தேதி லண்டனில் இரு நாடுகளின் பிரதிநிதிகள் சந்திக்க இருப்பது முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.














