இன்று முதல் 5 நாட்கள் அமெரிக்காவின் அதிபருக்கான சிறப்பு பருவநிலை தூதர் ஜான் கெர்ரி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் அதிபருக்கான சிறப்பு பருவநிலை தூதராக இருக்கும் ஜான் கேவி ஜூலை 25 ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதி வரை இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்த சுற்றுப்பயணத்தில் அவர் டெல்லி மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்கிறார். டெல்லியில் மூத்த அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார். மேலும் சென்னையில் வருகிற 28ஆம் தேதி நடைபெற உள்ள ஜி 20 சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை காண நீடித்த மந்திரிகள் கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார்.
இந்தப் பயணம் பருவநிலை மற்றும் தூய எரிசக்தி பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் அமையும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சேமிப்புக்கான தீர்வுகளை காண்பதில் முதல் நிலைகளை மேற்கொள்வதற்கான தளம் ஒன்றை கட்டமைக்க பரஸ்பரம் முயற்சிகளை மேற்கொள்வது, பூஜ்ஜிய பசுமை வாயு வெளியேற்ற பேருந்துகளை உபயோகிக்க ஆதரவு மற்றும் தூய எரிசக்தி விநியோக சங்கிலி பரவலாக்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி பகிரப்படும் என தெரிவித்துள்ளனர்.