தைவானுக்கு 1.1 பில்லியன் டாலர் ஆயுத விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு

September 3, 2022

தைவானுக்கு 1.1 பில்லியன் டாலர் ஆயுத விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது சீனாவை கோபப்படுத்தியுள்ளது. தைவானுக்கு 60 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் 100 ஆகாயத்திலிருந்து வான் ஏவுகணைகள் உட்பட 1.1 பில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவ உபகரணங்களை விற்பனை செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக சீனா எதிர் நடவடிக்கைகளை எடுக்கபோவதாக அச்சுறுத்துகிறது. கடந்த மாதம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தைபேக்கு பயணம் செய்தார். அப்போது தைவானைச் […]

தைவானுக்கு 1.1 பில்லியன் டாலர் ஆயுத விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது சீனாவை கோபப்படுத்தியுள்ளது.

தைவானுக்கு 60 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் 100 ஆகாயத்திலிருந்து வான் ஏவுகணைகள் உட்பட 1.1 பில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவ உபகரணங்களை விற்பனை செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக சீனா எதிர் நடவடிக்கைகளை எடுக்கபோவதாக அச்சுறுத்துகிறது.

கடந்த மாதம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தைபேக்கு பயணம் செய்தார். அப்போது தைவானைச் சுற்றி சீனாவின் ஆக்கிரமிப்பு இராணுவப் பயிற்சிகள் நடைபெற்று கொண்டிருந்தது. இப்படியொரு சூழலில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்த ஆயுத விற்பனையில் சைட்விண்டர் ஏவுகணைகள் அடங்கும். அவை காற்றில் இருந்து வான் மற்றும் மேற்பரப்பு தாக்குதல் பணிகளுக்கு பயன்படுத்தப்படலாம். இது சுமார் 85.6 மில்லியன் டாலர் மதிப்பிலானது. அதோடு சுமார் 355 மில்லியன் டாலர் மதிப்பில் ஹார்பூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் தைவானின் கண்காணிப்பு ரேடார் திட்டத்திற்காக 665.4 மில்லியன் டாலர்கள் வழக்கப்படவுள்ளது.
இவ்வாறு பென்டகனின் பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் (DSCA) தெரிவித்துள்ளது.

இது குறித்து வாஷிங்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் லியு பெங்யு கூறுகையில், இந்த ஆயுத விற்பனை அமெரிக்க-சீனா உறவுகளை "கடுமையாக பாதிக்கிறது" என்றார். மேலும் சீனா சட்டபூர்வமான மற்றும் தேவையான எதிர் நடவடிக்கைகளை உறுதியாக எடுக்கும் என்று அவர் கூறினார்.
இதனால் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதற்றம் விரைவில் குறையும் என்று தெரியவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu