அமெரிக்க கருவூலத்துறை, இந்தியா, இத்தாலி, மெக்சிகோ, தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளை தனது நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது.
தொடர்ச்சியாக இரண்டு அறிக்கைகளில், விடுக்கப்பட்ட மூன்று நிபந்தனைகளில் ஒன்றை மட்டுமே பூர்த்தி செய்துள்ள காரணத்தால், இந்த நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில், தற்போதைய நிலையில், சீனா, ஜப்பான், கொரியா, ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தைவான் நாடுகள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க கருவூலத்துறை, கடந்த ஜூன் மாதம், இந்தியாவை கண்காணிப்பு பட்டியலில் சேர்த்தது. கொரோனா பரவலுக்கு பின்னர், மூன்றாவது முறையாக இந்தியா இந்த பட்டியலில் அப்போது இடம் பெற்றது. தொடர்ந்து 12 மாதங்களாக, 2% ஜிடிபிக்கு மேலாக சர்வதேச வர்த்தகத்தில் இடம் பிடிக்கும் நாடுகள் இந்த பட்டியலில் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.