ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 3.2% உயர்ந்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. பணவீக்கம், வட்டி விகிதம் உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவில், பொருளாதார நிலை மேம்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவின் ஜிடிபி வளர்ச்சி முந்தைய இரண்டு காலாண்டுகளை விட மூன்றாம் காலாண்டில் வளர்ச்சி அடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஃபெடரல் வங்கி, வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளதால், அமெரிக்காவில் வீடுகள் முதலான சொத்துக்களில் முதலீடு செய்வது, வருடாந்திர அடிப்படையில் 27.1% குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. வட்டி விகிதங்கள் உயர்ந்த போதிலும், பொருளாதார வளர்ச்சி உயர்ந்துள்ளது ஆச்சரியம் அளிப்பதாக கூறப்படுகிறது. அத்துடன், நடப்பு காலாண்டில், அமெரிக்காவின் வருடாந்திர பொருளாதார வளர்ச்சி 1% ஆக இருக்கும் உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.














