சீன வளர்ச்சியை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகள் வெற்றி பெறாது - சீன வெளியுறவு மந்திரி

March 7, 2023

சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகள் வெற்றி பெறாது என கடுமையாக விமர்சித்து உள்ளார் சீன வெளியுறவு மந்திரி குவின் கேங். சீனாவில் வெளியுறவு மந்திரி குவின் கேங் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், சீனா தனது நாட்டின் முக்கிய நலன்களை பாதுகாக்கும் என கூறியதுடன், பிற நாடுகளின் ஆதிக்கம் எதிர்க்கப்படும் என கூறினார். ஒரு சில கூட்டணி நாடுகளின் அரசியல் மற்றும் மற்றவர்களின் ஒத்திசைவை பெறாமல் விதிக்கப்படும் ஒருசார்பு தடைகளை நாங்கள் […]

சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகள் வெற்றி பெறாது என கடுமையாக விமர்சித்து உள்ளார் சீன வெளியுறவு மந்திரி குவின் கேங்.

சீனாவில் வெளியுறவு மந்திரி குவின் கேங் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், சீனா தனது நாட்டின் முக்கிய நலன்களை பாதுகாக்கும் என கூறியதுடன், பிற நாடுகளின் ஆதிக்கம் எதிர்க்கப்படும் என கூறினார். ஒரு சில கூட்டணி நாடுகளின் அரசியல் மற்றும் மற்றவர்களின் ஒத்திசைவை பெறாமல் விதிக்கப்படும் ஒருசார்பு தடைகளை நாங்கள் எதிர்க்கிறோம் என்று அவர் கூறினார். சீனா மற்றும் ரஷியா இரு நாடுகளும் சர்வதேச உறவுகளுக்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளன. அவர்களது நெருங்கிய இருதரப்பு உறவுகளை பனிப்போர் அடிப்படையில் பார்ப்பது சரியானது அல்ல என்றும் கூறியுள்ளார்.

சீனாவின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்கள் பாதுகாக்கப்படும். பழைய நண்பர்களுடனான உறவை மேம்படுத்தி, வலுப்படுத்தும் பணியை சீனா தொடரும். உக்ரைன் விவகாரத்தில், ஏதோ ஒரு மறைமுக கரம் பின்னால் இருந்து நெருக்கடியை தீவிரப்படுத்துவது போன்று தோன்றுகிறது. அமைதியாக, காரணத்துடன் கூடிய பேச்சுவார்த்தை தேவையான ஒன்றாக உள்ளது என குவின் கூறியுள்ளார். இதேபோன்று, சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகள் வெற்றி பெறாது என கடுமையாக விமர்சித்து உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu