போர் நிறுத்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு நேரடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்காவை ஹமாஸ் வலியுறுத்தி வருவதாக பிளிங்கன் கூறியுள்ளார்.
காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இது தொடர்பாக மூன்று கட்ட நிபந்தனைகளை அமெரிக்கா முன்வைத்துள்ளது. கத்தார் மற்றும் எகிப்து சார்பில் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஹமாஸ் தற்போது பதில் அளித்துள்ளது. அவர்கள் விடுத்த கோரிக்கைகள் சிலவற்றை மட்டுமே ஏற்க முடியும் என்று ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார். இந்த போர் நிறுத்தம் குறித்து ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஒசாமா கூறுகையில், நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேல் படைகள் காசாவில் இருந்து முழுமையாக வெளியேறுவது போன்ற கோரிக்கைகளை இஸ்ரேல் நிராகரித்துவிட்டது என்று தெரிவித்தார்.
ஹமாஸ்-ன் கோரிக்கைகள் பலவும் சிறியவை தான் என்றபோதிலும் சில கோரிக்கைகள் எதிர்பார்க்க முடியாத அளவில் உள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரைத்ததை விட அதிக வேறுபாடுகளை கொண்டிருக்கிறது என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலீவன் கூறியுள்ளார். ஹமாசின் கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. போர் நிறுத்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு நேரடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்காவை ஹமாஸ் வலியுறுத்தி வருவதாக பிளிங்கன் கூறியுள்ளார்.