அமெரிக்காவின் ஹெச் 1 பி விசா விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க குடியேற்ற அமைப்பு தெரிவித்துள்ளது. ஹெச் 1 பி விசா மூலம் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் அமெரிக்கா செல்வது வழக்கம்.
கடந்த மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 17ஆம் தேதி வரை, எச் 1 பி விசாவுக்கான விண்ணப்பக் காலம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இறுதி நாளான நேற்று, தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து, “நேற்று, சில வாடிக்கையாளர்கள் தங்கள் எச் 1 பி விசா பதிவுகளை செய்ய முடியாமல் போனது. தளத்தில் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, திங்கட்கிழமை மாலை 5 மணி வரை விசா விண்ணப்பம் நீட்டிக்கப்படுகிறது” என்று ட்விட்டர் வாயிலாக அமெரிக்க குடியேற்ற அமைப்பு தெரிவித்துள்ளது.