2020 க்கு பிறகு முதல் முறையாக வட்டியை குறைத்தது அமெரிக்கா

September 19, 2024

அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், தனது முக்கிய கடன் வட்டி விகிதத்தை அரை சதவிகிதம் குறைத்துள்ளது. இதன் மூலம் வட்டி விகிதம் 4.75% முதல் 5.00% வரையாக குறைந்துள்ளது. கடந்த 2020 ல் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு முதல் முறையாக வட்டி விகிதம் குறைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதக் குறைப்பு மூலம், அமெரிக்காவில் வசிக்கும் மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் குறைந்த வட்டி […]

அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், தனது முக்கிய கடன் வட்டி விகிதத்தை அரை சதவிகிதம் குறைத்துள்ளது. இதன் மூலம் வட்டி விகிதம் 4.75% முதல் 5.00% வரையாக குறைந்துள்ளது. கடந்த 2020 ல் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு முதல் முறையாக வட்டி விகிதம் குறைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வட்டி விகிதக் குறைப்பு மூலம், அமெரிக்காவில் வசிக்கும் மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வாங்க முடியும். இதனால், வங்கி மற்றும் கிரெடிட் கார்டு வட்டி விகிதங்கள் குறையும். மேலும், பணவீக்கம் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாகவும், வேலைவாய்ப்பு விகிதம் நன்றாகவே உள்ளதாகவும் அமெரிக்க மத்திய வங்கி கருதுகிறது. இதன் காரணமாக, வருட இறுதிக்குள் மற்றும் அடுத்த ஆண்டில், வட்டி விகிதத்தை மேலும் குறைக்க மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu