தென்கொரியாவுடன் அமெரிக்க போர் விமானங்கள் கூட்டு பயிற்சி

December 21, 2022

கடந்த வாரம் கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை வடகொரியா சோதித்தது. இதனைத் தொடர்ந்து தென்கொரியாவுடனான கூட்டு போர் பயிற்சிக்காக அமெரிக்கா அணு ஆயுத திறன் கொண்ட குண்டுவீச்சு போர் விமானங்களை கொரியா தீபகற்பத்தில் குவித்துள்ளது. தென்கொரியாவின் மேற்கு பகுதியில் கொரிய தீபகற்பத்தையொட்டி அமைந்துள்ள ஜெஜூ தீவில் இருநாட்டு விமானப்படைகளின் கூட்டு போர் பயிற்சி நேற்று தொடங்கியதாகவும், இந்த வாரம் முழுவதும் பயிற்சி தொடரும் எனவும் தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த போர் பயிற்சியில் அமெரிக்காவின் […]

கடந்த வாரம் கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை வடகொரியா சோதித்தது.

இதனைத் தொடர்ந்து தென்கொரியாவுடனான கூட்டு போர் பயிற்சிக்காக அமெரிக்கா அணு ஆயுத திறன் கொண்ட குண்டுவீச்சு போர் விமானங்களை கொரியா தீபகற்பத்தில் குவித்துள்ளது. தென்கொரியாவின் மேற்கு பகுதியில் கொரிய தீபகற்பத்தையொட்டி அமைந்துள்ள ஜெஜூ தீவில் இருநாட்டு விமானப்படைகளின் கூட்டு போர் பயிற்சி நேற்று தொடங்கியதாகவும், இந்த வாரம் முழுவதும் பயிற்சி தொடரும் எனவும் தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த போர் பயிற்சியில் அமெரிக்காவின் யு.எஸ். பி-52 ரக குண்டு வீச்சு விமானங்களும், எப்-22 ராக போர் விமானங்களும், தென்கொரியாவின் எப்-35 மற்றும் எப்-15 ரக விமானங்களும் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் திடீரென கொரிய தீபகற்பத்தில் போர் பயிற்சியை தொடங்கியிருப்பது அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக வடகொரியா தனது ஏவுகணை சோதனையை வேகப்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu