அமெரிக்கா இந்தியாவிற்கு வழங்கிய நிதி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக அமெரிக்கா வழங்கிய நிதியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. கடந்த மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றபோது, அவர் மற்றும் எலான் மஸ்க் தலைமையிலான DODGE, தேவையற்ற அரசின் செலவுகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையின் படி, இந்தியா மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட பல நாடுகளுக்கு வழங்கப்பட்ட நிதிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 21 மில்லியன் டாலர் (182 கோடி ரூபாய்) நிதி, வங்கதேசம், நேபாளம், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்பட்ட நிதி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.














