அமெரிக்காவின் 3ம் காலாண்டு பொருளாதார வளர்ச்சி 5.2% ஆக உயர்வு

November 30, 2023

அமெரிக்காவின் மூன்றாம் காலாண்டு பொருளாதார வளர்ச்சி 5.2% ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், அமெரிக்காவின் ஜிடிபி வளர்ச்சி 4.9% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கணிப்பை விட கூடுதலாக, 5.2% அளவில் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில், அமெரிக்காவின் ஜிடிபி வளர்ச்சி கடந்த காலாண்டில் தான் வேகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். வருடாந்திர அடிப்படையில் 3.6% பொருளாதார வளர்ச்சியை […]

அமெரிக்காவின் மூன்றாம் காலாண்டு பொருளாதார வளர்ச்சி 5.2% ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், அமெரிக்காவின் ஜிடிபி வளர்ச்சி 4.9% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கணிப்பை விட கூடுதலாக, 5.2% அளவில் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில், அமெரிக்காவின் ஜிடிபி வளர்ச்சி கடந்த காலாண்டில் தான் வேகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். வருடாந்திர அடிப்படையில் 3.6% பொருளாதார வளர்ச்சியை அமெரிக்கா பதிவு செய்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி சர்வதேச நாடுகளில் எதிரொலிக்கும் என்பதால், இது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu