அமெரிக்காவில் 23 லட்சம் அரசு ஊழியர்களுக்கு, 8 மாத ஊதியத்துடன் ராஜினாமா செய்ய டொனால்டு டிரம்ப் அனுமதி அளித்துள்ளார். பிப்ரவரி 6ஆம் தேதிக்குள் ராஜினாமா செய்ய விரும்பும் ஊழியர்களுக்கு மட்டுமே இந்த 8 மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பணியாளர் மேலாண்மை ஆணையம், செவ்வாய்க்கிழமை மின்னஞ்சல் மூலம் இதனை அறிவித்தது. அந்த மின்னஞ்சலில், அரசு பணியை தொடர விரும்பாதவர்கள் "ராஜிநாமா செய்கிறேன்" என்று பதிலளித்து, செப்டம்பர் 30 வரை முழு ஊதியமும், அனைத்து சலுகைகளும் […]

அமெரிக்காவில் 23 லட்சம் அரசு ஊழியர்களுக்கு, 8 மாத ஊதியத்துடன் ராஜினாமா செய்ய டொனால்டு டிரம்ப் அனுமதி அளித்துள்ளார்.

பிப்ரவரி 6ஆம் தேதிக்குள் ராஜினாமா செய்ய விரும்பும் ஊழியர்களுக்கு மட்டுமே இந்த 8 மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பணியாளர் மேலாண்மை ஆணையம், செவ்வாய்க்கிழமை மின்னஞ்சல் மூலம் இதனை அறிவித்தது. அந்த மின்னஞ்சலில், அரசு பணியை தொடர விரும்பாதவர்கள் "ராஜிநாமா செய்கிறேன்" என்று பதிலளித்து, செப்டம்பர் 30 வரை முழு ஊதியமும், அனைத்து சலுகைகளும் பெற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க ராணுவ வீரர்கள், தூதரகம், பாதுகாப்பு மற்றும் தபால் சேவை ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu