அமெரிக்காவில் 10,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணிநீக்கப்பட்டனர்.
அமெரிக்காவில், புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, 10,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணிநீக்கப்பட்டனர். டிரம்பின் ஆதரவாளரான எலான் மஸ்க் தலைமையிலான DODGE துறை, அரசின் தேவையற்ற செலவுகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து, USAID மற்றும் பல்வேறு அரசுத் துறைகளில் பணிநீக்கங்களை பரிசீலித்தது. உள்துறை, எரிசக்தி, வேளாண்மை, சுகாதாரம் மற்றும் மனிதவளத் துறைகளில் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, நோய் கட்டுப்பாடு மையம், எரிசக்தி துறை, மற்றும் வனத்துறை ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 75,000 அரசுத் ஊழியர்கள் தற்காலிகமாகத் தங்கள் பணிகளை நிறுத்தி வெளியேற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.