அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட வரிகளை, அமெரிக்கா தற்போது ஹாங்காங் மீதும் விரிவுபடுத்தியுள்ளது. அமெரிக்க சுங்கத் துறை அறிவிப்பின் படி, ஹாங்காங் பொருட்களுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்படும். இது சீனாவிற்கான வரி விதிப்புக்கு இணையானது. ஹாங்காங் பொருளாதாரம் அமெரிக்கா மற்றும் சீனா வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிப்பதால், இந்த நடவடிக்கை உலகளாவிய விநியோக சங்கிலிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மதிப்பீடு செய்யப்படுகிறது. சீனா, அமெரிக்காவின் நிலக்கரி, […]

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட வரிகளை, அமெரிக்கா தற்போது ஹாங்காங் மீதும் விரிவுபடுத்தியுள்ளது. அமெரிக்க சுங்கத் துறை அறிவிப்பின் படி, ஹாங்காங் பொருட்களுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்படும். இது சீனாவிற்கான வரி விதிப்புக்கு இணையானது. ஹாங்காங் பொருளாதாரம் அமெரிக்கா மற்றும் சீனா வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிப்பதால், இந்த நடவடிக்கை உலகளாவிய விநியோக சங்கிலிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மதிப்பீடு செய்யப்படுகிறது.

சீனா, அமெரிக்காவின் நிலக்கரி, திரவ இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றுக்கு 15% வரி விதித்து பதிலடி கொடுத்துள்ளது. மேலும், கச்சா எண்ணெய், விவசாய உபகரணங்கள், சில வாகனங்களுக்கு 10% வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா கனடா, மெக்சிகோ நாடுகளுக்கு விதித்த வரிகளை தற்காலிகமாக நிறுத்திய நிலையில், சீனாவிற்கான வரியை மட்டும் தொடர்ந்தது. இந்த நிலையில், ஹாங்காங் மீதான வரி இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கு நன்மையாக அமையலாம் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu