அமெரிக்கா H-1B விசா கட்டணம் உயர்வு – வெளிநாட்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு சிக்கல்

September 22, 2025

டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் புதிய உத்தரவின்படி, H-1B விசா பெறும் வெளிநாட்டு ஊழியர்கள் $1,00,000 (ரூ.88 லட்சம்) கட்டணம் செலுத்த வேண்டும்; இதனால் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு வாய்ப்புகள் குறையலாம். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள் மற்றும் வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை நாளுக்கு நாள் மோசமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவில் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற $1,00,000 (ரூ.88 லட்சம்) கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் உண்டு என்று […]

டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் புதிய உத்தரவின்படி, H-1B விசா பெறும் வெளிநாட்டு ஊழியர்கள் $1,00,000 (ரூ.88 லட்சம்) கட்டணம் செலுத்த வேண்டும்; இதனால் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு வாய்ப்புகள் குறையலாம்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள் மற்றும் வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை நாளுக்கு நாள் மோசமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவில் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற $1,00,000 (ரூ.88 லட்சம்) கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வரும் என்றும், அடுத்த 12 மாதங்களுக்கு இது செயல்படும் என்றும், உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் தற்போது H-1B விசாவில் படித்து வரும் மாணவர்கள் தங்களது படிப்பை எந்த இடையூறும் இல்லாமல் முடித்து கொள்ளலாம்.

ஆனால் படிப்பை முடித்த பிறகே, அவர்கள் அமெரிக்காவில் வேலை செய்ய H-1B விசா பெறும்போது $1,00,000 கட்டணம் செலுத்த வேண்டும். இதனால் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிப்பை முடிக்கும் வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்க நிறுவனங்கள் வேலைக்கு குறைவாக எடுக்கும் வாய்ப்பு உள்ளது.2024 ஆம் ஆண்டில் H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், ஆகையால் இந்த நடவடிக்கை இந்திய தொழில்நுட்பத் துறையினருக்கு பெரும் சிக்கலை உருவாக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu