அமெரிக்கா–இந்தியா வர்த்தக பேச்சுவார்த்தை ரத்து: டிரம்ப் புதிய வரி அறிவிப்பு

August 18, 2025

டிரம்ப் அறிவித்த கூடுதல் வரி காரணமாக 6வது சுற்று இந்தியா–அமெரிக்கா பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பொருட்களுக்கு பரஸ்பர வரிகளை விதித்ததையடுத்து, இரு நாடுகளும் ஐந்து சுற்று வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தன. ஆனாலும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்நிலையில் வருகிற 25-ந்தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. டிரம்ப், இந்திய பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிப்பதாகவும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் […]

டிரம்ப் அறிவித்த கூடுதல் வரி காரணமாக 6வது சுற்று இந்தியா–அமெரிக்கா பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பொருட்களுக்கு பரஸ்பர வரிகளை விதித்ததையடுத்து, இரு நாடுகளும் ஐந்து சுற்று வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தன. ஆனாலும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்நிலையில் வருகிற 25-ந்தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. டிரம்ப், இந்திய பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிப்பதாகவும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக அபராதமாக மேலும் 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாகவும் அறிவித்தார். இந்த அபராத வரி 27-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. புதிய வரி அமலுக்கு வரும் நிலையில், அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் இந்திய வருகை தள்ளி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu