கடந்த டிசம்பர் மாத தரவுகளின் படி, அமெரிக்காவின் வருடாந்திர பணவீக்கம் 6.5% ஆக சரிந்துள்ளது. இது, முந்தைய நவம்பர் மாதத்தில் 7.1% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், உணவு மற்றும் எரிபொருள் சார்ந்த நுகர்வோர் குறியீட்டு எண் டிசம்பர் மாதத்தில் 0.3% மற்றும் நவம்பர் மாதத்தில் 0.2% உயர்வை பதிவு செய்திருந்தது. அமெரிக்காவின் புள்ளியியல் நிறுவனம், இந்த தரவுகளை வெளியிட்டுள்ளது. மேலும், கடந்த 2021 அக்டோபர் மாதத்திற்கு பின்னர், குறைந்தபட்ச பணவீக்கப் பதிவு தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பணவீக்கம் குறித்த இந்த தரவுகள் உலகளாவிய முறையில் பங்குச் சந்தை ஏற்றத்தை மேலும் தொடரச் செய்யும் என்று கருதப்படுகிறது. அத்துடன், அமெரிக்க பெடரல் அமைப்பு, வட்டி விகிதங்களை சற்று குறைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே வேளையில் வட்டி விகிதங்களை வரும் 2024 ஆம் ஆண்டில் குறைக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க பெடரல் அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும், இந்த தகவல்கள் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.













