கழன்று விழும் ஸ்டீயரிங் வீல்கள் - சர்ச்சையில் சிக்கிய டெஸ்லா

March 9, 2023

அமெரிக்காவில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன வாகனங்கள் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளன. டெஸ்லா நிறுவனத்தின் மாடல் ஒய் எஸ்யூவி வாகனங்களில், ஸ்டீயரிங் வீல்கள் வண்டி ஓடிக் கொண்டிருக்கும் போதே கழன்று விழுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், அமெரிக்க வாகனப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம், டெஸ்லா மீது விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில், நிகழாண்டில் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்ட மாடல் ஒய் வாகனங்களில் கோளாறு உள்ளது நிரூபணம் ஆகியுள்ளது. ஸ்டீயரிங் வீல்களை அதன் தண்டுடன் இணைக்கும் போல்ட்டுகள் […]

அமெரிக்காவில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன வாகனங்கள் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளன. டெஸ்லா நிறுவனத்தின் மாடல் ஒய் எஸ்யூவி வாகனங்களில், ஸ்டீயரிங் வீல்கள் வண்டி ஓடிக் கொண்டிருக்கும் போதே கழன்று விழுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், அமெரிக்க வாகனப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம், டெஸ்லா மீது விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணையில், நிகழாண்டில் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்ட மாடல் ஒய் வாகனங்களில் கோளாறு உள்ளது நிரூபணம் ஆகியுள்ளது. ஸ்டீயரிங் வீல்களை அதன் தண்டுடன் இணைக்கும் போல்ட்டுகள் இல்லாமலேயே வாகனங்கள் விற்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதிகம் விற்பனையாகும் இந்த மாடல் கார்களில் இத்தகைய குறைபாடு கவனிக்கப்படாமல் விற்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல வாடிக்கையாளர்கள் டெஸ்லா மீது நம்பிக்கை இழந்துள்ளதாக கூறி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu