ஈராக் - அமெரிக்க படைகளின் கூட்டு தாக்குதலில் ஐ.எஸ். கமாண்டர் பலி

September 14, 2024

ஈராக்-அமெரிக்கா கூட்டு தாக்குதலில் ஐ.எஸ். கமாண்டர் அபு அலி அல்-துனிசி மற்றும் துணை கமாண்டர் அகமது ஹமீத் கொல்லப்பட்டனர். ஈராக்கில், ஈராக் படைகள் மற்றும் அமெரிக்க ராணுவம் இணைந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈராக்கின் மேற்கு பிராந்தியமான அன்பர் மாகாணத்தில், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இதில் ஈராக்கின் தேசிய புலனாய்வு அமைப்பும், விமானப்படையும் அமெரிக்க படைகளுடன் சேர்ந்து பணியாற்றுகின்றன. இந்த நிலையில், நேற்று நடந்த மோதலில், ஈராக்-அமெரிக்கா கூட்டு […]

ஈராக்-அமெரிக்கா கூட்டு தாக்குதலில் ஐ.எஸ். கமாண்டர் அபு அலி அல்-துனிசி மற்றும் துணை கமாண்டர் அகமது ஹமீத் கொல்லப்பட்டனர்.

ஈராக்கில், ஈராக் படைகள் மற்றும் அமெரிக்க ராணுவம் இணைந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈராக்கின் மேற்கு பிராந்தியமான அன்பர் மாகாணத்தில், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இதில் ஈராக்கின் தேசிய புலனாய்வு அமைப்பும், விமானப்படையும் அமெரிக்க படைகளுடன் சேர்ந்து பணியாற்றுகின்றன.

இந்த நிலையில், நேற்று நடந்த மோதலில், ஈராக்-அமெரிக்கா கூட்டு தாக்குதலில் ஐ.எஸ். கமாண்டர் அபு அலி அல்-துனிசி மற்றும் துணை கமாண்டர் அகமது ஹமீத் கொல்லப்பட்டனர். துனிசியாவிலிருந்து ஈராக்கிற்கு வந்தவர் அபு அலி. இவருக்கு அமெரிக்கா 5 மில்லியன் டாலர் பரிசாக அறிவித்திருந்தது. ஐ.எஸ். ஸ்லீப்பர் செல்கள் அதிகரித்து வருவதால், இதுபோன்ற தாக்குதல்கள் அதிகரிக்கின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஒரு ஆபரேஷனில் 15 பேர் கொல்லப்பட்டனர். 7 அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர். அண்மையில் நடந்த நடவடிக்கையில், ஆயுதங்கள், கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் மற்றும் 10 வெடிப்பொருள் பெல்ட்கள் கைப்பற்றப்பட்டதாக ஈராக் அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu