பல நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் பணியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதில் ஜப்பானுடன் ஏற்பட்ட புதிய ஒப்பந்தம் வர்த்தக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஜப்பானுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15% வரி விதிக்கப்படும் என்றும், அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் 90% லாபத்தை பெறும் என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து ஜப்பான், அமெரிக்காவில் 550 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய ஒப்பந்தமாகியுள்ளது. இது லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், ஜப்பானுடன் நல்ல உறவை நிலைநிறுத்துவோம் என்றும் டிரம்ப் தெரிவித்தார். மேலும் பிலிப்பைன்ஸுடனும் இதேபோல் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.














