அமெரிக்கருக்கு மேற்கொள்ளப்பட்ட முகம் மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

November 22, 2024

அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயதான டெரெக் பிஃபாஃப், தற்கொலை முயற்சியில் முகம் சிதைந்த நிலையில் இருந்து மீண்டு வந்துள்ளார். அவர் சமீபத்தில் வெற்றிகரமாக முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். ரோசெஸ்டரில் உள்ள மயோ கிளினிக்கில் 80 மருத்துவர்கள் 50 மணி நேரம் தொடர்ந்து செய்த இந்த அறுவை சிகிச்சை உலகளவில் குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 60க்கும் குறைவான முகம் மாற்று அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடந்துள்ள நிலையில், […]

அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயதான டெரெக் பிஃபாஃப், தற்கொலை முயற்சியில் முகம் சிதைந்த நிலையில் இருந்து மீண்டு வந்துள்ளார். அவர் சமீபத்தில் வெற்றிகரமாக முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். ரோசெஸ்டரில் உள்ள மயோ கிளினிக்கில் 80 மருத்துவர்கள் 50 மணி நேரம் தொடர்ந்து செய்த இந்த அறுவை சிகிச்சை உலகளவில் குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 60க்கும் குறைவான முகம் மாற்று அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடந்துள்ள நிலையில், மிகக் குறைவான வெற்றிகளே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2014ஆம் ஆண்டு நடந்த தற்கொலை முயற்சியில் டெரெக் பிஃபாஃப் முகத்தில் கடுமையான காயங்களை ஏற்படுத்திக் கொண்டார். பின்னர் 10 ஆண்டுகளில் 58 முறை மறு அறுவை சிகிச்சை செய்தும் அவர் தனது முகத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியவில்லை. திட உணவு உண்பது, கண்ணாடி அணிவது போன்ற அடிப்படை செயல்களை கூட செய்ய முடியாமல் தவித்து வந்தார். தற்போது நடந்த முகம் மாற்று அறுவை சிகிச்சையில் அவரது முகத்தின் 85% பகுதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சைக்கு உதவிய நன்கொடையாளர் மற்றும் மருத்துவ குழுவினருக்கு டெரெக் பிஃபாஃப் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டு மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu