அமெரிக்காவில் தட்டம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதனை அந்நாட்டு நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 2019ல் அமெரிக்காவில் தட்டமை பெரிய அளவில் பரவியது. இது குழந்தைகளை எளிதில் தாக்கும் நோயாகும். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள குறிப்பில் இதுவரை 113 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இந்தத் தொற்று ஏழு பகுதிகளில் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தொடக்க மாதங்களில் இந்த அளவிற்கு தொற்று ஏற்பட்டு இருப்பது அபாயகரமானது என்று நோய் தடுப்பு வல்லுநர்கள் கூறியுள்ளனர். அதாவது 17 மடங்கு அதிகம் என்பது அதிர்ச்சியான செய்தியாக உள்ளது. தட்டம்மை உள்ளவர்கள் இருமினால் அவர்களிடமிருந்து நோய் தொற்று மற்றவர்களுக்கு பரவும்.காற்றில் இரண்டு மணி நேரம் வரை நோய்க்கிருமிகள் அழியாமல் இருக்கும். இதற்கு எம் எம் ஆர் தடுப்பூசி நிவாரணமாக இருக்கும். இது இரண்டு தவணைகளாக செலுத்தப்படும். இந்த தடுப்பூசி 95 சதவீதம் வரை இந்த நோயிடம் இருந்து காக்கும் என்று கூறப்படுகிறது.