அமெரிக்கா: நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர் வெற்றி

November 10, 2022

அண்மையில் நடைபெற்ற அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட இந்திய வம்சாவழியைச் சேர்ந்த 5 பேர் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளனர். மிச்சிகன் தொகுதியில் தொழிலதிபர் ஸ்ரீ தநேதர், இலிநாய்ஸ் தொகுதியில் ராஜா கிருஷ்ணமூர்த்தி, சிலிக்கான் வேலி பகுதியில் ரோ கண்ணா, வாஷிங்டன் தொகுதியில் பிரமிளா ஜெயபால், கலிபோர்னியா மாகாணத்தில் அமீ பேரா ஆகிய ஐந்து இந்திய அமெரிக்கர்கள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த ஐவரில், […]

அண்மையில் நடைபெற்ற அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட இந்திய வம்சாவழியைச் சேர்ந்த 5 பேர் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளனர்.

மிச்சிகன் தொகுதியில் தொழிலதிபர் ஸ்ரீ தநேதர், இலிநாய்ஸ் தொகுதியில் ராஜா கிருஷ்ணமூர்த்தி, சிலிக்கான் வேலி பகுதியில் ரோ கண்ணா, வாஷிங்டன் தொகுதியில் பிரமிளா ஜெயபால், கலிபோர்னியா மாகாணத்தில் அமீ பேரா ஆகிய ஐந்து இந்திய அமெரிக்கர்கள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த ஐவரில், 4 பேர் ஏற்கனவே நாடாளுமன்ற பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அவர்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, மக்கள் மத்தியில் அவர்களுக்கு உள்ள ஆதரவை குறிக்கிறது. மேலும், டெக்சாஸ் மாகாணத்தில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சந்தீப் ஸ்ரீவஸ்தாவா தோல்வியைத் தழுவியுள்ளார். இவர்கள் தவிர வேறு பல இந்திய அமெரிக்கர்களும் வெற்றியடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க மக்கள் தொகையில் 1% மட்டுமே உள்ள இந்தியர்கள், இவ்வாறு தலைமை பொறுப்புகளில் அங்கம் வகித்து சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu