கடலில் விழுந்த அமெரிக்க ராணுவ விமானம்

November 29, 2023

அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான விமானம் ஜப்பான் கடல் பகுதியில் விழுந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள யாகூஷிமா தீவு அருகே, அமெரிக்க ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்துள்ளது. இந்த விமானத்தில் 8 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆஸ்பிரே ரகத்தை சேர்ந்த ஹைபிரிட் விமானம் ஆகும். அந்த பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் ஜப்பான் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில், விமானத்தில் […]

அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான விமானம் ஜப்பான் கடல் பகுதியில் விழுந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள யாகூஷிமா தீவு அருகே, அமெரிக்க ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்துள்ளது. இந்த விமானத்தில் 8 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆஸ்பிரே ரகத்தை சேர்ந்த ஹைபிரிட் விமானம் ஆகும். அந்த பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் ஜப்பான் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில், விமானத்தில் இருந்த ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ரோந்து படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், விமானத்தின் உடைந்த உதிரி பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu