அமெரிக்க ராணுவம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரகசிய ராக்கெட் ஏவும் திட்டத்தில் பணியாற்றி வந்தது. இந்த ராக்கெட் இன்று ஏவப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
X 37B என்ற ரகசிய விண்கலம் திட்டத்தில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டு வருகிறது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. நேற்றைய தினத்தில் ராக்கெட் ஏவப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திட்டம் இன்று ஒத்திவைக்கப்பட்டது. அமெரிக்க நேரப்படி, இன்று இரவு 8:14 மணிக்கு நாசாவின் கென்னடி ராக்கெட் ஏவு தளத்திலிருந்து இது செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.














