அமெரிக்காவின் தனியார் நிலவு திட்டத்தில் அனுப்பப்பட்ட ஒடிசியஸ் விண்கலம் நிரந்தர தூக்க நிலைக்கு சென்று விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நாசா மற்றும் இன்டியூட்டிவ் மெஷின்ஸ் ஆகியவை இணைந்து ஒடிசிஎஸ் விண்கலத்தை நிலவுக்கு அனுப்பின. நிலவில் சரித்திர தரை இறக்கத்தை பதிவு செய்த பிறகு, எரிசக்தி தீர்ந்ததால் ஒடிசியஸ் விண்கலம் தூக்க நிலைக்கு சென்றது. எனினும், சூரிய வெளிச்சம் கிடைக்கும் சமயத்தில் இது விழித்தெழும் என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால், தற்போது, போதிய சூரிய வெளிச்சம் கிடைத்த போதும், ஒடிசியஸ் விழித்தெழவில்லை. எனவே, இது நிரந்தரமாக செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.