அமெரிக்காவின் அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல், தென் கொரியா வந்தடைந்துள்ளது. தென்கொரியாவின் புஸ்ஸான் துறைமுகத்திற்கு நீர்மூழ்கிக் கப்பல் வந்தடைந்ததை தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில், அமெரிக்காவின் SSGN ரக நீர்மூழ்கி கப்பல் தென் கொரிய கடல் பகுதியில் நிறுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
நேற்று, வடகொரியா 2 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ள நிலையில், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தென்கொரியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, அமெரிக்க அதிபர் மற்றும் தென் கொரிய அதிபர் ஆகியோர் கூட்டாக இணைந்து ராணுவத்தை வழிநடத்த பேச்சுவார்த்தை நடத்தினர் அதன்படி, ராணுவ ஒத்திகை நடந்து முடிந்துள்ளது. மேலும், 1980களுக்குப் பிறகு, அமெரிக்கா, தனது நீர்மூழ்கி கப்பலை தென்கொரியாவுக்கு அனுப்ப முடிவெடுத்துள்ளது. இதன் மூலம், அமெரிக்கா தென்கொரியாவுக்கு ஆதரவாக உள்ளதை மென்மேலும் உறுதி செய்துள்ளது.