யு.எஸ் ஓபன் பேட்மிட்டன் தொடரின் அரை இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை தோல்வி அடைந்தார்.
யு.எஸ் ஓபன் பேட்மிட்டன் தொடர் அமெரிக்காவில் டெக்சாஸில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரை இறுதி போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மாளவிகா பன்சோத், ஜப்பானை சேர்ந்த நட்சுகி நிடைரா உடன் மோதினார். இதில் மாளவிகா 16 -21, 13- 21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து அரை இறுதி சுற்றில் இருந்து வெளியேறினார்