தைவானை ஆக்கிரமிப்பதில் இருந்து சீனாவைத் தடுக்க அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறுபுறம், தைவான் தனது இறையாண்மை உரிமையை ஆதரிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தி வருகிறது.
தைவான் மீது படையெடுப்பதைத் தடுக்க, சீனாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. தைவான் ஜலசந்தியில் இராணுவப் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில் சீனப் படையெடுப்பு குறித்த அச்சங்களுக்கு தீர்வு காணும் வகையில், வாஷிங்டன் மற்றும் தைபேயின் ஐரோப்பிய ஒன்றியத் தூதர்கள் ஆரம்ப கட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கணினி சில்லுகள் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள் போன்ற முக்கியமான தொழில்நுட்பங்களில் சீனாவுடனான சில வர்த்தகம் மற்றும் முதலீட்டைக் கட்டுப்படுத்த அமெரிக்கா யோசனை செய்து வருகிறது.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஜனநாயக ரீதியில் ஆளும் தைவானை பெய்ஜிங்கின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளார். மேலும் ராணுவ பலத்தை பயன்படுத்துவதை நிறுத்தவில்லை. அடுத்த மாதம் நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் அவர் மூன்றாவது, ஐந்தாண்டு தலைமை பதவியை பெற உள்ளார். இந்நிலையில் தைவான் அரசாங்கம் சீனாவின் இறையாண்மை கோரிக்கைகளை கடுமையாக நிராகரிக்கிறது.














