இந்தியாவுக்கு 31 ஆளில்லா விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இந்தியாவுக்கு 31 எம்கியு 9பி ஆயுதம் தாங்கிய டிரோன்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்தகைய டிரோன்களை நீர்மூழ்கி கப்பல்களுக்கு எதிராக போர் புரிய மற்றும் கடல் பரப்பை கண்காணிக்க உதவும். இந்த ட்ரோன்கள் நீடித்து உழைக்கும். அதிக உயரத்தில் இருந்து செயல்படும். வானில் 35 மணி நேரத்திற்கும் மேலாக இவை பறக்கக்கூடியவை. இந்த டிரோன்களால் நான்கு ஹெர்பயர் வகை ஏவுகணைகள், சுமார் 450 கிலோ வெடிகுண்டுகளை சுமக்க முடியும். அமெரிக்காவிடமிருந்து டிரோன்களை வாங்குவதற்கு கடந்த ஆண்டு பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத்சிங் தலைமையிலான பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்தது. இந்த 31டிரோன்களில் இந்திய கடற்படைக்கு பதினைந்து, ராணுவம் மற்றும் விமானப்படைக்கு தலா எட்டு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இவை இந்திய சீன எல்லைப் பகுதியில் கண்காணிப்பை அதிகரிக்க பயன்படுத்தப்படும். இந்த டிரோன்களின் மதிப்பு 3.99 பில்லியன் டாலர்கள் என்று அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை கூறியுள்ளது. அதாவது இந்திய மதிப்பின்படி 33 ஆயிரம் கோடி ஆகும்.