கும்பகோணத்தை பூர்வீகமாகக் கொண்ட புற்றுநோய் நிபுணர் சு. திருஞானசம்பந்தத்துக்கு, அமெரிக்க அதிபர் அலுவலகம் விருது வழங்கி கௌரவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதியுறும் மக்களுக்காக, அவர் செய்து வரும் வாழ்நாள் சேவையை பாராட்டி, இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் அமெரிக்க அதிபரின் பாராட்டு சான்றிதழ் ஆகியவை மருத்துவர் திருஞானசம்பந்தத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் விசே, இந்த விருதை வழங்கி உள்ளார்.
மருத்துவர் திருஞானசம்பந்தம், அமெரிக்க மருத்துவத்துறையில் கடந்த 50 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். மேலும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு பெரிதும் துணையாக இருந்தார். எனவே, அவருக்கு விருது வழங்கி உள்ளது மிகவும் பெருமைமிகு தருணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.