உக்ரைன்-அமெரிக்க பேச்சுவார்த்தையில் தகராறு ஏற்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளார். முன்னதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தினர், ஆனால் அது வாக்குவாதமாக மாறியது. இதன் காரணமாக ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். இந்தச் சம்பவம் உலக அரசியலில் பெரும் கவனத்தை பெற்றது. இந்நிலையில் ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்தபடி, அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி வரும் அனைத்து விதமான ராணுவ உதவிகளையும் நிறுத்தியுள்ளதாகவும், அமைதிக்கான உறுதிப்பாட்டை உக்ரைன் வெளிப்படுத்தும் வரை உதவிகள் வழங்கப்பட மாட்டாது எனவும் கூறப்பட்டுள்ளது.