இந்தியா மற்றும் கனடா நாட்டினருக்கு மட்டும் அமெரிக்காவின் எச்1பி விசா சோதனை திட்டம்

December 21, 2023

எச்1பி விசாக்களை உள்நாட்டிலேயே புதுப்பிக்கும் சோதனை திட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. இந்தியா மற்றும் கனடா நாட்டினருக்கு மட்டும் இந்த சேவை தொடங்கப்படுகிறது. வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையான திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மொத்தம் 20000 பேருக்கு விசா புதுப்பிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. வரும் ஜனவரி 29 முதல் ஏப்ரல் 1 வரை, எச்1பி விசா புதுப்பிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. விசா தொடர்பான பின்னூட்டங்கள் ஏப்ரல் 15 வரை ஏற்றுக் கொள்ளப்படும் […]

எச்1பி விசாக்களை உள்நாட்டிலேயே புதுப்பிக்கும் சோதனை திட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. இந்தியா மற்றும் கனடா நாட்டினருக்கு மட்டும் இந்த சேவை தொடங்கப்படுகிறது. வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையான திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மொத்தம் 20000 பேருக்கு விசா புதுப்பிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

வரும் ஜனவரி 29 முதல் ஏப்ரல் 1 வரை, எச்1பி விசா புதுப்பிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. விசா தொடர்பான பின்னூட்டங்கள் ஏப்ரல் 15 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் விசாக்களை புதுப்பிக்க வேண்டுவோர், இணைய வழியில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் 4000 பேருக்கு விசா புதுப்பிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. அதில், 2000 பேர் கனடாவில் இருந்தும் 2000 பேர் இந்தியாவில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu