அமெரிக்கா: கலிபோர்னியாவில் பி 21 என்ற வெடிகுண்டு வீசும் விமானம் அறிமுகம்

December 3, 2022

அமெரிக்கா, பி 21 என்ற வெடிகுண்டு வீசும் விமானம் ஒன்றை கலிபோர்னியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது ஆறாவது தலைமுறை விமானம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விமானப்படையில் இது விரைவில் இணைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு வீசும் விமானத்தை தி நார்த்ரோப் குரூமன் குழு உருவாக்கி உள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த விமானம், அமெரிக்காவின் வலிமையை அதிகரிப்பதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலாளர் லாய்ட் ஆஸ்டின், பி 21 விமானம் 40 ஆண்டுகளுக்கு […]

அமெரிக்கா, பி 21 என்ற வெடிகுண்டு வீசும் விமானம் ஒன்றை கலிபோர்னியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது ஆறாவது தலைமுறை விமானம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விமானப்படையில் இது விரைவில் இணைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டு வீசும் விமானத்தை தி நார்த்ரோப் குரூமன் குழு உருவாக்கி உள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த விமானம், அமெரிக்காவின் வலிமையை அதிகரிப்பதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலாளர் லாய்ட் ஆஸ்டின், பி 21 விமானம் 40 ஆண்டுகளுக்கு செயல்படும் என கூறியுள்ளார். மேலும், இந்த விமானத்திற்கு பிரத்தியேக மற்றும் சிறப்பு பாதுகாப்புகள் மற்றும் பராமரிப்புகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப்போரின் பி 21 நினைவாக இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், 21 ஆம் நூற்றாண்டின் முதல் வெடிகுண்டு வீசும் விமானமாக இது அறியப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu