இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் உறுதி - அமெரிக்கா எச்சரிக்கை

August 13, 2024

இந்த வாரம் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடந்துவது உறுதி என்று அமெரிக்க எச்சரித்துள்ளது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இஸ்ரேல் மீதான நேரடி தாக்குதலை அதிபர் மசூத் விரும்பவில்லை. இந்நிலையில் இந்த வாரத்தில் இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் முன்னெடுக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. எனவே இஸ்ரேலை பாதுகாக்க நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை […]

இந்த வாரம் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடந்துவது உறுதி என்று அமெரிக்க எச்சரித்துள்ளது.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இஸ்ரேல் மீதான நேரடி தாக்குதலை அதிபர் மசூத் விரும்பவில்லை.

இந்நிலையில் இந்த வாரத்தில் இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் முன்னெடுக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. எனவே இஸ்ரேலை பாதுகாக்க நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதோடு ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி போன்ற மேற்கு நாடுகளும் ஈரானை எச்சரித்துள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் ராணுவ நடவடிக்கை எடுத்தால் அது கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். அதோடு பிராந்தியங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் மேற்கத்திய நாட்டு தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் எங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எங்களுடைய உரிமை என்று ஈரான் அதிபர் மசூத் உறுதியாக கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu