அமெரிக்கா - தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் மசோதா நிறைவேற்றம்

November 30, 2022

அமெரிக்காவில் நேற்று, தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் வரலாற்று மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தன்பாலின திருமணங்களுக்கு அனுமதி வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மசோதாவிற்கு, அனைத்து தரப்பும் ஒப்புதல் வழங்கியதால், செவ்வாய்க்கிழமை இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. “காதல் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே, ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தான் காதலிக்கும் நபரை கரம் படிக்க உரிமை உள்ளது” என்று அதிபர் ஜோ பைடன் இது குறித்து பேசி உள்ளார். எல்ஜிபிடி சமூகத்தினருக்கு இந்த சட்ட மசோதா மூலம் நீதி கிடைத்துள்ளதாக செனட் அவையின் […]

அமெரிக்காவில் நேற்று, தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் வரலாற்று மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

தன்பாலின திருமணங்களுக்கு அனுமதி வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மசோதாவிற்கு, அனைத்து தரப்பும் ஒப்புதல் வழங்கியதால், செவ்வாய்க்கிழமை இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. “காதல் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே, ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தான் காதலிக்கும் நபரை கரம் படிக்க உரிமை உள்ளது” என்று அதிபர் ஜோ பைடன் இது குறித்து பேசி உள்ளார். எல்ஜிபிடி சமூகத்தினருக்கு இந்த சட்ட மசோதா மூலம் நீதி கிடைத்துள்ளதாக செனட் அவையின் மூத்த தலைவர் சூக் சுமர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தன்பாலின உறவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், தன்பாலின திருமணங்களுக்கான சட்ட வரைவு தற்போது தான் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், இந்த மசோதா மூலம், கலப்பு திருமணங்களுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu