இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க போர்க்கப்பல் விரைவு

October 9, 2023

பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் பகிரங்க போரை அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கியுள்ளது. அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலான போர்டு கேரியர் இஸ்ரேலை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. சற்றும் எதிர்பாராத நேரத்தில், பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் நடத்திய மின்னல் வேக தாக்குதல் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுத்து வரும் இஸ்ரேலுக்கு ஆதரவாக, அமெரிக்க போர்க்கப்பலில் […]

பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் பகிரங்க போரை அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கியுள்ளது. அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலான போர்டு கேரியர் இஸ்ரேலை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.
சற்றும் எதிர்பாராத நேரத்தில், பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் நடத்திய மின்னல் வேக தாக்குதல் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுத்து வரும் இஸ்ரேலுக்கு ஆதரவாக, அமெரிக்க போர்க்கப்பலில் 5000 வீரர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். மேலும், அந்த கப்பலில் யுஎஸ்எஸ் தாமஸ் ஹட்னர், யுஎஸ்எஸ் நார்மன்டி, யுஎஸ்எஸ் ராம்பேஜ், யுஎஸ்எஸ் ரூஸ்வெல்ட், யுஎஸ்எஸ் காரனி, எப் 35, ஏபி 15, எப் 16, ஏ 10 ரக போர் விமானங்கள் உள்ளன. எனவே, இந்தப் போர் கப்பல் இஸ்ரேலை அடைந்ததும், மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு பேரழிவுகள் ஏற்படலாம் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu