அமெரிக்கா தாட் (THAAD) எனப்படும் அதிநவீன ஏவுகணை தடுப்பு அமைப்பை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு முன்வந்துள்ளது.
இது ஈரானின் அச்சுறுத்தலை சமாளிக்க உதவும் என்றும், அமெரிக்கா 100 வீரர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப உள்ளதாக பென்டகன் உறுதி செய்துள்ளது. இந்த தாட் அமைப்பு, இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் செயல்படும்.
தாட் அமைப்பில் ரேடார், கட்டுப்பாட்டு அறை மற்றும் ஏவுகணைகளை உள்ளடக்கிய கவச வாகனம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. எதிரியின் ஏவுகணைகளை ரேடார் கண்காணித்து, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பும். கட்டுப்பாட்டு அறையிலிருந்து வெளியிடப்படும் உத்திகளின்படி, கவச வாகனத்தில் இருந்து ஏவுகணைகள் எதிரியின் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கிறது. தாட் அமைப்பு சுமார் 200 கி.மீ. தொலைவிலுள்ள இலக்குகளை துல்லியமாக தாக்குவதற்கான திறனை கொண்டது.