தென்கொரியாவில் அமெரிக்க போர்க்கப்பல் முகாம்

June 24, 2024

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பல் தென்கொரியாவில் நிறுத்தப்பட்டுள்ளது. தென் கொரியாவுக்கு அமெரிக்காவின் யூஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் விமானம் தாங்கி போர்க்கப்பல் வந்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இணைந்து தென்கொரிய கடல் பகுதியில் போர் பயிற்சி செய்ய உள்ளன. இது தொடர்பாக பென்டகன் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவது, சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிப்பது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல் தென்கொரியாவுக்கு சென்றுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. […]

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பல் தென்கொரியாவில் நிறுத்தப்பட்டுள்ளது.

தென் கொரியாவுக்கு அமெரிக்காவின் யூஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் விமானம் தாங்கி போர்க்கப்பல் வந்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இணைந்து தென்கொரிய கடல் பகுதியில் போர் பயிற்சி செய்ய உள்ளன. இது தொடர்பாக பென்டகன் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவது, சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிப்பது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல் தென்கொரியாவுக்கு சென்றுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. சென்ற வாரம் ரஷ்ய அதிபர் புதின் வடகொரிய அதிபர் கிம் ஆகியோர் ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இது தென்கொரியாவுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எனவே இது குறித்து தங்கள் நாட்டில் உள்ள ரஷ்ய தூதரை அழைத்து தென்கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கவும் தென்கொரியா முடிவு செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu