ஆயுதங்களுடன் அமெரிக்க விமானம் இஸ்ரேல் வந்தது

October 11, 2023

ஆயுதங்களுடன் அமெரிக்க விமானம் முதல்முறையாக இஸ்ரேலில் தரை இறங்கியுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. நேரடியாக அமெரிக்கா இந்த போரில் பங்கு பெறவில்லை என்ற போதிலும் ஆயுதங்கள் வழங்க முன்வந்துள்ளது. இந்நிலையில், மத்திய தரைக்கடல் பகுதிக்கு போர்க்கப்பலை அமெரிக்க அனுப்பி உள்ளது. இந்நிலையில் ஆயுதங்களுடன் அமெரிக்க விமானம் முதல்முறையாக தெற்கு இஸ்ரேலில் தற்போது தரை இறங்கியுள்ளது. இத்தகவலை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. ஆனால் ஆயுத தொகுப்பு குறித்த விவரங்களை வெளியிடவில்லை. இந்த […]

ஆயுதங்களுடன் அமெரிக்க விமானம் முதல்முறையாக இஸ்ரேலில் தரை இறங்கியுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. நேரடியாக அமெரிக்கா இந்த போரில் பங்கு பெறவில்லை என்ற போதிலும் ஆயுதங்கள் வழங்க முன்வந்துள்ளது. இந்நிலையில், மத்திய தரைக்கடல் பகுதிக்கு போர்க்கப்பலை அமெரிக்க அனுப்பி உள்ளது. இந்நிலையில் ஆயுதங்களுடன் அமெரிக்க விமானம் முதல்முறையாக தெற்கு இஸ்ரேலில் தற்போது தரை இறங்கியுள்ளது. இத்தகவலை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. ஆனால் ஆயுத தொகுப்பு குறித்த விவரங்களை வெளியிடவில்லை. இந்த போர் காலத்தில் எங்கள் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நேற்று நான்கு முறை அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu