அமெரிக்க ராக்கெட் வெடித்ததால், வளிமண்டல மேலடுக்கில் ஓட்டை

September 25, 2023

கடந்த வியாழக்கிழமை இரவு, அமெரிக்கா அனுப்பிய ராக்கெட் வானில் வெடித்து சிதறியது. இதனால் பூமியின் வளிமண்டல மேலடுக்கில் ஓட்டை விழுந்து உள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். அமெரிக்கா இந்த புதிய ராக்கெட் குறித்த எந்த தகவலையும் பொதுவில் வெளியிடவில்லை. ரகசியமாக வைக்கப்பட்ட இந்த திட்டம், ராக்கெட் வெடித்து சிதறியதால் வெளிவந்துள்ளது. சுமார் 1500 கிலோ மீட்டர் உயரத்தில் ராக்கெட் வெடித்து சிதறிய புகை தென்பட்டது. அதன் பிறகு, சிவப்பு நிறத்தில் வானில் ஒளி தென்பட்டது. இதனால், இந்த ராக்கெட் […]

கடந்த வியாழக்கிழமை இரவு, அமெரிக்கா அனுப்பிய ராக்கெட் வானில் வெடித்து சிதறியது. இதனால் பூமியின் வளிமண்டல மேலடுக்கில் ஓட்டை விழுந்து உள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அமெரிக்கா இந்த புதிய ராக்கெட் குறித்த எந்த தகவலையும் பொதுவில் வெளியிடவில்லை. ரகசியமாக வைக்கப்பட்ட இந்த திட்டம், ராக்கெட் வெடித்து சிதறியதால் வெளிவந்துள்ளது. சுமார் 1500 கிலோ மீட்டர் உயரத்தில் ராக்கெட் வெடித்து சிதறிய புகை தென்பட்டது. அதன் பிறகு, சிவப்பு நிறத்தில் வானில் ஒளி தென்பட்டது. இதனால், இந்த ராக்கெட் வெடிப்பு, வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் உள்ள அயனி மண்டலத்தில் சிறிய ஓட்டையை ஏற்படுத்தி இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்காக செலுத்தப்படும் ராக்கெட்ளுக்கான அறிவிப்பு, வெறும் 24 மணி நேரங்கள் முன்னதாகவே வெளியிடப்படும். அதன்படி, முன் அறிவிப்புகள் எதுவுமின்றி, முக்கிய செயற்கைக்கோளை சுமந்து சென்ற ராக்கெட், தற்போது வெடித்து சிதறி, இத்தகைய நிகழ்வு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu