டெஸ்லா மற்றும் ஆல்பாபெட் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் ஏமாற்றம் அளிக்கும் வகையில் வெளியாகி உள்ளன. இதனால், கடந்த 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க பங்கு சந்தை மோசமான வர்த்தக நாளை பதிவு செய்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் குறைவான வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதே சமயத்தில், டெஸ்லா நிறுவனத்தின் வருவாய் எதிர்பார்ப்பை விட குறைவாக பதிவாகியுள்ளது. இதனால், இந்த இரு நிறுவனங்களின் பங்கு மதிப்பு குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சி அடைந்தது. விளைவாக, அமெரிக்க பங்குச் சந்தையில் கணிசமான பங்கு விற்பனை பதிவானது.