மனிதர் ஒருவருக்கு பன்றியின் இதயத்தை பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்துவது இது 2வது முறையாகும்.பன்றியின் உறுப்புகள், அளவில் மனிதனின் உறுப்புகளை போலவே உள்ளன. அதனால், பன்றியின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஏற்கனவே ஒருமுறை பன்றியின் இதயத்தை மனிதருக்கு வெற்றிகரமாக பொருத்தி சாதனை படைக்கப்பட்டது. ஆனால், அந்த நபர் 2 மாதங்கள் வரை மட்டுமே உயிருடன் இருந்தார். தற்போது, இறக்கும் தருவாயில் இருந்த மனிதருக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்டு அவர் உயிர் பிழைத்துள்ளார். தற்போதைய நிலையில், அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் பதிவாகியுள்ளது. எனவே, இந்த முறை நடத்தப்பட்ட இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றி அடையும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.














