மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை, மூளைச் சாவு அடைந்த மனிதரின் உடலில் பொருத்தும் பரிசோதனை, கடந்த 61 நாட்களாக மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்க மருத்துவர்கள் இந்த பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த பரிசோதனை வெற்றி பெற்றுள்ளதாக, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக எண்ணற்ற மக்கள் காத்திருக்கின்றனர். குறிப்பாக, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக பலரும் காத்திருக்கும் வேளையில், பன்றியின் சிறுநீரகத்தை மனிதர்களுக்கு வெற்றிகரமாக பொருத்துவதில் முக்கிய வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. பன்றியின் உறுப்புகள் கிட்டத்தட்ட மனிதர்களின் உறுப்புகளின் அளவை கொண்டு உள்ளதால், அவற்றை மரபணு மாற்றம் செய்து, மனிதர்களுக்கு பொருத்தம் ஆராய்ச்சி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. அந்த வகையில், சுமார் 61 நாட்களாக, மூளைச்சாவு அடைந்த நபரின் உடலில் பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தும் பரிசோதனைகள் வெற்றி பெற்றுள்ளதாக அமெரிக்க மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.