அமெரிக்க உற்பத்தியாளர்களிடமிருந்து இராணுவ மற்றும் இரட்டை பயன்பாட்டு தொழில்நுட்பங்களை வாங்கி அவற்றை ரஷ்ய பயனர்களுக்கு வழங்குவதாக குற்றம் சாட்டி, ரஷ்யாவின் இராணுவ கொள்முதல் வலையமைப்பு மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யரான யூரி யூரிவிச் ஓரேகோவ் மற்றும் அவரது இரண்டு நிறுவனங்கள் - Nord-Deutsche Industrieanlagenbau GmbH, Opus Energy Trading LLC மீது கொள்முதல் முகவர் என்று குற்றம் சாட்டி பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இது குறித்து கருவூலத்தின் துணைச் செயலாளர் வாலி அடியேமோ கூறுகையில்,
ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் காரணமாக ரஷ்யா அதன் நிதிநிலை மற்றும் தொழில்நுட்பங்களைப் பாதுகாக்க போராட வேண்டியுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் ரஷ்யாவிற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதாவது இந்த எதிர்ப்புகள் ரஷ்யாவை, தரம் தாழ்ந்த சப்ளையர்கள் மற்றும் காலாவதியான போர் உபகரணங்களை பயன்படுத்த வழிவகுத்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.