அமெரிக்கா வரிவிதிப்பு: சீனாவுடன் இணைந்து எதிர்கொள்ள அழைப்பு

April 9, 2025

அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு புதிய வரிகளை விதித்துள்ளது. அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு புதிய வரிகளை விதித்துள்ளது. இந்த சூழலில், சீனா பதிலடி கொடுக்கும் விதமாகஅமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 34% வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த வரி வரும் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், சீனாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலாக மேலும் 50% வரி விதிப்பேன் என எச்சரித்துள்ளார். இந்நிலையில், அமெரிக்க […]

அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு புதிய வரிகளை விதித்துள்ளது.

அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு புதிய வரிகளை விதித்துள்ளது. இந்த சூழலில், சீனா பதிலடி கொடுக்கும் விதமாகஅமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 34% வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த வரி வரும் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், சீனாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலாக மேலும் 50% வரி விதிப்பேன் என எச்சரித்துள்ளார். இந்நிலையில், அமெரிக்க வரிவிதிப்பை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள சீனத் தூதரக செய்தித் தொடர்பாளர் யூ ஜிங் வெளியிட்டுள்ள எக்ஸ் (முந்தைய ட்விட்டர்) பதிவில், “சீனா–இந்தியா உறவு பரஸ்பர நன்மை அடிப்படையிலானது. வரி மற்றும் வர்த்தகப் போர்களுக்கு தீர்வு ஒத்துழைப்பில்தான் உள்ளது. ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புவாதத்துக்கு எதிராக இணைந்து போராட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu