அமெரிக்க வரி அதிர்ச்சி – திருப்பூர் பின்னலாடைத் துறைக்கு ரூ.12000 கோடி நஷ்ட அச்சுறுத்தல்

August 26, 2025

அமெரிக்கா விதித்த அதிக வரி காரணமாக திருப்பூர் பின்னலாடைத் துறை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா, இந்தியாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டின் திருப்பூர் பின்னலாடைத் துறை கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.45,000 கோடிக்கு ஏற்றுமதி நடைபெறும் நிலையில், ரூ.12,000 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கடந்த 10 நாட்களில் ரூ.4,000 கோடி ஏற்றுமதி நிறுத்தப்பட்டதாகவும், சில தொழிற்சாலைகள் மூடப்பட்டதாகவும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வேலை […]

அமெரிக்கா விதித்த அதிக வரி காரணமாக திருப்பூர் பின்னலாடைத் துறை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா, இந்தியாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டின் திருப்பூர் பின்னலாடைத் துறை கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.45,000 கோடிக்கு ஏற்றுமதி நடைபெறும் நிலையில், ரூ.12,000 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கடந்த 10 நாட்களில் ரூ.4,000 கோடி ஏற்றுமதி நிறுத்தப்பட்டதாகவும், சில தொழிற்சாலைகள் மூடப்பட்டதாகவும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வேலை இழப்புகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் முதல்வர் ஸ்டாலின், பிரதமரிடம் நிதி உதவி கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை மத்திய அரசு செப்டம்பர் 30 வரை தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் உற்பத்திச் செலவு குறைந்து, போட்டி நாடுகளுடன் விலைப் போட்டியில் நிற்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu