அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் அமைந்துள்ள நெவாடா பல்கலைக்கழக வளாகத்தில், நேற்று துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் 3 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு காரணமாக பதற்றம் அதிகரித்தது. விமான நிலைய சேவை பாதிக்கப்பட்டது. மேலும், பல்கலைக்கழக வளாகத்தின் அருகில் உள்ள சுற்றுலா மையங்களில் இயக்கங்கள் பாதிக்கப்பட்டன. சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மேலும், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக சந்தேககிக்கப்படும் நபரை அவர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். இதற்கு முன்னர், 2017 ஆம் ஆண்டு, லாஸ் வேகாஸ் துப்பாக்கி சூட்டில் 60 பேர் உயிரிழந்து உள்ளதால், தற்போது நிகழ்ந்துள்ள துப்பாக்கி சூடு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தவிர, அமெரிக்காவின் குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்து உள்ளதாக கூறப்படுகிறது.