சோனாபயோஸ் கருவியை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு

September 13, 2024

நவீன தொழில்நுட்பத்தில் அமைந்த ‘சோனோபயோஸ்’ கருவிகளை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்த கருவி, நீர்மூழ்கிக் கப்பல்களை கடலில் எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் கண்டறிய உதவுகிறது. இது இந்திய கடற்படையின் சக்தியை மேலும் மேம்படுத்தும். இந்தியா மூன்று வகையான ‘சோனோபயோஸ்’ கருவிகளை 52.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.443 கோடி) வாங்க இருக்கிறது. இந்த கருவியை விமானத்திலிருந்து கடலுக்கு ஏற்ற முடியும். அதில் உள்ள சென்சார்கள் கடலுக்குட்பட்ட ஒலியலைகளை துல்லியமாகப் பிரித்து நீர்மூழ்கிக் […]

நவீன தொழில்நுட்பத்தில் அமைந்த ‘சோனோபயோஸ்’ கருவிகளை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இந்த கருவி, நீர்மூழ்கிக் கப்பல்களை கடலில் எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் கண்டறிய உதவுகிறது. இது இந்திய கடற்படையின் சக்தியை மேலும் மேம்படுத்தும். இந்தியா மூன்று வகையான ‘சோனோபயோஸ்’ கருவிகளை 52.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.443 கோடி) வாங்க இருக்கிறது. இந்த கருவியை விமானத்திலிருந்து கடலுக்கு ஏற்ற முடியும். அதில் உள்ள சென்சார்கள் கடலுக்குட்பட்ட ஒலியலைகளை துல்லியமாகப் பிரித்து நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டறிய உதவுகின்றன. அமெரிக்க ராணுவத்தினால் பரிந்துரை செய்யப்பட்ட இந்த விற்பனைக்கு, அமெரிக்க நாடாளுமன்றம் 30 நாள்களில் பரிசீலித்து முடிவை அறிவிக்க இருக்கிறது. கடந்த மாத இறுதியில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சா் ஆண்டனி பிளிங்கன் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu